அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஆக.2) விடுமுறை தினத்தை முன்னிட்டு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதலே பக்தர்கள் நாழிக்கிணறு மற்றும் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வாகன வருகை அதிகரித்ததால் திருச்செந்தூர் நகர் பகுதி மற்றும் தெப்பக்குளம் சுற்றியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.