சேலம் மாவட்டத்தில் நாளை (பிப்-13) தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறவுள்ளது. காவல்துறை விதித்த 51 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. "விஜயின் சேலம் மக்கள் சந்திப்பில் 5000 பேரை தவிர்த்து வேறு யாரையும் அனுமதிக்க மாட்டோம்" என சேலம் மாநகர காவல் துணை ஆணையர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், ‘நுழைவுச்சீட்டு இல்லாதவர்களுக்கு கட்டாயம் அனுமதி கிடையாது’ என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எச்சரித்துள்ளார்.
நன்றி: குமுதம்