மாற்றத்திற்காக வாக்களித்தவர்கள் ஏமாற்றம்: கி.வீரமணி கண்டனம்

மாற்றத்திற்காக வாக்களித்தவர்கள், குதிரைப் பேர அரசியல் அருவருப்புகளைக்கண்டு ஏமாற்றம் அடைந்துள்ளனர் என தவெக அரசுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், ‘குதிரை பேரமல்ல; குதிரை வேகம்’ என்பது சொல் அலங்காரமா? குதிரை கீழே தள்ளி குழியும் பறிக்கும் என்ற ஆபத்தை ஆட்சியாளர்கள் மறந்துவிடக் கூடாது. அரசியல் வீர வசனம் பேசுவது மட்டும் அறம்சார்ந்ததாக ஒருபோதும் ஆகாது. ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றம்’ என்பது புரியட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி