PM-KISAN திட்டத்தின் தவணைத் தொகையை இதுவரை பெறாத விவசாயிகள், மே 30க்குள் பதிவு செய்து தேவையான ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். வங்கி கணக்கு, ஆதார் இணைப்பு மற்றும் e-KYC விவரங்கள் சரியாக இல்லாத காரணத்தால் பலருக்கு தொகை வராத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. PM-KISAN திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த தொகை, ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளாக நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.