திருப்பூரில் விஜயை பார்க்க வந்தவர்கள் மயக்கம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தவெக தலைவர் விஜய் இன்று (ஏப்.14) பரப்புரை செய்கிறார். இந்நிலையில், திருப்பூர் பெருமாநல்லூரில் விஜயை பார்க்க வந்த பலர் மயக்கம். கொளுத்தும் உச்சி வெயிலில் காத்திருப்பதால் பலருக்கு மயக்கம் ஏற்பட்ட நிலையில், ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பெண்கள், குழந்தைகள் ஏராளமானோர் இருப்பதால் பாதுகாப்பாக இருக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி