பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களில், பேச்சுவார்த்தைக்காக அழைத்து செல்லப்பட்ட சங்க நிர்வாகிகளை போலீசார் மண்டபத்தில் அடைத்து சிறை வைத்துள்ளனர். இதனிடையே போராட்ட களத்தின் மின்சார இணைப்பை துண்டித்த போலீசார், அங்கு திரண்டிருந்த மற்ற செவிலியர்களையும் கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அரசின் இந்த நடவடிக்கைக்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர் அமைப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.
நன்றி:SunNews