மேற்கு வங்காளத்தில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்ட SIR நடவடிக்கை மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 91 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார். இவ்வாறு நீக்கப்பட்டவர்கள் அனைவரும் வங்காளதேசத்தை சேர்ந்த ஊடுருவல்காரர்கள் என்றும், அவர்களை விரைவில் இந்தியாவை விட்டு நாடு கடத்துவதற்கான நேரம் வந்துவிட்டது என்றும் அவர் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார்.