தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் அருகே கிளவிப்பட்டி நடுத் தெருவைச் சேர்ந்தவர் மொட்டைசாமி மனைவி பேச்சியம்மாள் (39). இவர் தனது வீட்டுடன் சிறிய கடையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு சிகரெட் வாங்கிய இளைஞரிடம் பணம் கேட்டபோது, அவரை அவதூறாக பேசினாராம்.
இதைப் பேச்சியம்மாள் கண்டித்தாராம். அந்த இளைஞர் பேச்சியம்மாளை அவதூறாக பேசி, அவர் அணிந்திருந்த ஆடையைப் பிடித்து இழுத்து கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து பேச்சியம்மாள் திங்கள்கிழமை அளித்த புகாரின் பேரில் நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப்பதிந்து, அதே ஊர் மேல்காலனிச் சேர்ந்த பூபதி மகன் மனோவை (23) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.