மனு விவரம்:தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு, மஞ்சள் குலை, பனங் கிழங்கு போன்றவற்றை வியாபாரிகள், விவசாயிகள் சாலை ஓரங்களில் வைத்து விற்பனை செய்வது வழக்கம். இந்த நிலையில், தற்போது கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
இதனால் சாலை ஓரங்களில் பண்டிகை பொருள்கள் விற்பனை செய்ய காவல் துறையினா் அனுமதி மறுத்து வருகின்றனா்.வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பொங்கல் பண்டிகைக்காக சாலை ஓரக் கடைகளை அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.