விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு

எட்டயபுரத்தில் சார் ஆட்சியர் ஹீயூமன்சூ மங்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதமடைவதாகவும், மக்காச்சோளத்திற்கு போதிய விலை கிடைக்கவில்லை என்றும் விவசாயிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய விவசாயிகள், தமிழ்மாநில காங்கிரஸ் மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தலைமையில் சார் ஆட்சியர் முன்பு மக்காச்சோளத்தை கொட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். காட்டுப்பன்றிகள் கட்டுப்பாடு, குளிர்சாதன கிடங்கு அமைப்பு, மக்காச்சோளத்திற்கு ஆதார விலை நிர்ணயம் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி