இல்லையெனில், இரவு 9 மணிக்கு பதிலாக கூடுதலாக நள்ளிரவு 12 மணி வரை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இப்பிரச்னை தொடர்பாக நாட்டுப்படகு மீனவர்களின் கருத்தைக் கேட்டு, ஒரு வாரத்துக்குப் பின்னர் முடிவு அறிவிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். பேச்சுவார்த்தையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மீன்வளத் துறையினர், வருவாய்த் துறையினர், விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தினர், மீன்பிடித் தொழிலாளர்கள் பங்கேற்றனர். இதுதொடர்பாக மீனவர்கள் கூறுகையில், 'ஒரு வாரமாக கடலுக்குச் செல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கோரிக்கை தொடர்பாக உரிய தீர்வு கூறுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். எனவே, திங்கள்கிழமை முதல் கடலுக்குச் செல்லவுள்ளோம்' என்றனர்.
திமுக இளைஞரணி மண்டலக் கூட்டம் தயாராகும் உணவுகள்