இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ் மகன் சுதாகர் (45), டெய்லர். இவருக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லையாம். இதனால் மன வேதனையில் இருந்த சுதாகர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) வனசுந்தர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Devotional Card Tamil