தூத்துக்குடி: டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (டிச.2) முதல் டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் திட்டம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தப் பணிக்கு பார் நடத்தும் ஒப்பந்ததாரர்களை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள 123 டாஸ்மாக் கடைகளை அடைத்து, சிப்காட் வளாகத்தில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தொடர்புடைய செய்தி