விளாத்திகுளம் அருகே முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 146. 76 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட தார்ச் சாலை, பாலம் தரமற்ற முறையில் கட்டப்பட்டதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து கேள்வி எழுப்பிய கிராம மக்களை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் போலீசில் ஒப்படைப்போம் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.