சுமங்கலி பெண்கள் கலந்து கொண்ட காவேரி அம்மன் வழிபாடு

தூத்துக்குடி பாகம்பிரியாள் சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத கடைசி நாளை முன்னிட்டு காவேரி அம்மன் வழிபாடு நடைபெற்றது. இதில் சுமங்கலி பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இளம் சிறுமி ஒருவருக்கு காவேரி அம்மன் போன்று அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. ஐப்பசி மாதத்தில் காவேரி அம்மனை வழிபட்டால் மழைவளம் மற்றும் உலக நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம். பங்கேற்ற பெண்களுக்கு மஞ்சள் கயிறு, வளையல் பிரசாதமாக வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி