தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிவகங்கை கீழடி அருங்காட்சியகம், மதுரை திருமலை நாயக்கர் மஹால் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய இடங்களுக்கு கல்வி சுற்றுலா சென்றனர். கீழடியில் தொல்லியல் பொருட்களை கண்டு வரலாற்று அறிவை பெற்ற மாணவர்கள், திருமலை நாயக்கர் மஹாலையும் கண்டு களித்தனர். திருப்பரங்குன்றத்தில் முருகனை தரிசனம் செய்து ஆன்மீக அனுபவத்துடன் சுற்றுலாவை நிறைவு செய்தனர். பள்ளி ஆசிரியர்கள் இந்த சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.