தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு ரவி பாலன் தலைமையில் கொடியேற்றி மறையுரை வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருவிழாவின் 10 நாட்களும் மறையுரை, நற்கருணை ஆசிர்வாதம், திருப்பலிகள் நடைபெறும். வருகிற 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 5:45 மணியளவில் திருவிழா ஆடம்பர கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெறும். மாலை 6:30 மணிக்கு திருவிழா நிறைவு நற்கருணை ஆசீர், தொடர்ந்து கொடியிறக்கம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை வின்சென்ட், உதவிப் பங்குத்தந்தை விவேக், வேதியர் மார்ட்டின் மற்றும் அருட்சகோதரிகள், ஆலய கட்டளைத்தாரர்கள் செய்துவருகின்றனர்.
16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடக தடை தேவை: அன்புமணி