இந்நிலையில் குடிசை மாற்று வாரியம் சார்பில் சில வீடுகளை மட்டும் பழுதுபபார்த்து விட்டு அனைத்து வீடுகளையும் பழுது பார்க்க முடியாது இங்கு பொதுமக்கள் வசிப்பதற்கு தரமற்ற கட்டிடமாக உள்ளது எனவே உடனடியாக இந்த குடிசை மாற்று வாரிய வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் காலி செய்ய வேண்டுமென நோட்டீஸ் வழங்கி உள்ளது
மேலும் குடிசை மாற்று வாரியம் சார்பில் இந்த பகுதியில் இருந்து உடனடியாக காலி செய்ய வேண்டும் நாங்கள் கட்டிடத்தினை இடிக்க போகிறோம் என மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது மேலும் மாற்று இடம் 3 1/2 லட்சம் பணம் செலுத்தினால் தங்களுக்கு வழங்கப்படும் என கூறி வருகின்றனர் இதன் காரணமாக குடிசை மாற்று வாரிய பகுதிகள் வசித்து வரும் பொதுமக்கள் இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.