தூத்துக்குடி மாவட்ட அகில இந்திய சிவாஜி மன்றம் சார்பில் சிவன் கோவில் தேரடி அருகில் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட தலைவர் எட்வின் பானு தலைமை வகித்து சிவாஜி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 20வது வட்ட செயலாளர் வாசிராஜன் வரவேற்றார்.
வழக்கறிஞர் எஸ்டி அழகுவேல், மாவட்ட துணை தலைவர் அருள் வளவன், ஸ்டீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிவாஜி கணேசனுக்கு மத்திய அரசு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும், தமிழக அரசு ஆண்டு தோறும் சிவாஜி பெயரில் விருது வழங்க வேண்டும் என்று சங்க நிர்வாகிகள் வலியுறுத்தி பேசினர்.
விழாவில் தொழிலதிபர் பொன் குமரன் கலந்து கொண்டு மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். வஉசி இளைஞர் பேரவை மாநில பொதுச் செயலாளர் ஓம்சக்தி சங்கர், நகர செயலாளர் முரளி, மாவட்ட செயலாளர் சேவியர் மிஜியர், மற்றும் ராஜலிங்கம், உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக மாநகர தலைவர் தனபால் நன்றி கூறினார்.