தூத்துக்குடி மாவட்டம் குரங்கனியைச் சேர்ந்த முத்துக்குமார், தனியார் நிதி நிறுவனத்தில் பெற்ற கடனை முழுமையாகச் செலுத்தியும், மூன்று மாதங்களுக்கு அதிகப்படியாக தவணைத் தொகை பிடித்தம் செய்யப்பட்டதாகக் கூறி நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் ஆ. சங்கர், நமச்சிவாயம் ஆகியோர், நிதி நிறுவனம் அதிகப்படியாக வசூலித்த ரூ. 25,422, சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கான நஷ்ட ஈடு ரூ. 15,000, வழக்கு செலவுத் தொகை ரூ. 10,000 என மொத்தம் ரூ. 50,422 ஐ ஆறு வாரங்களுக்குள் வழங்க உத்தரவிட்டனர். தாமதித்தால் 9% வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் ஆணையம் கூறியுள்ளது.