இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி திரவிய ரத்ன நகரைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் நந்தினி (15), தூத்துக்குடியில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். நந்தினி சரியாக படிக்காததால் அவரது தாயார் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மன வேதனை அடைந்த நந்தினி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிப்காட் இன்ஸ்பெக்டர் (பொ) வின்சென்ட் அன்பரசி சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.