சாத்தான்குளம் அருகே, மோட்டார் சைக்கிள் மீது மனநலம் பாதிக்கப்பட்ட நபர் திடீரென குறுக்கே பாய்ந்ததில், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற மோகன் (62) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த ரவிச்சந்திரன் (50) காயமடைந்தார். மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் கால் முறிந்தது. பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.