எட்டயபுரம் பஸ் நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மகாகவி பாரதியார் பஸ் நிலையத்தின் மேற்கூரை, கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் நனைந்த நிலையில் திடீரென இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, பயணிகள் யாரும் காயமடையவில்லை. சேதமடைந்த பஸ் நிலையத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி