விளாத்திகுளம்: திருட்டு.. பெண் உள்பட 4 பேர் கைது

விளாத்திகுளம் அருகே அரசு பேருந்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, மகேஸ்வரி என்ற பெண்ணிடமிருந்து ரூ. 2 லட்சம் திருடப்பட்டது. நிலம் விற்ற பணத்துடன் தூத்துக்குடி சென்றபோது இந்த திருட்டு சம்பவம் நிகழ்ந்தது. புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், நாகர்கோவில் மற்றும் தூத்துக்குடி பகுதிகளைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட ரூ. 2 லட்சம் முழுமையாக பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி