தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சிறுகுறு தொழில்துறை அமைச்சர் மதன்ராஜ் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் பங்கேற்பில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷுமகாஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். எம்எல்ஏக்கள் சரவணன், அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன், கருணாநிதி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.