தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பேரூராட்சிக்குட்பட்ட 1 மற்றும் 6 வது வார்டுகளில் சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை, 15 நாளைக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். விலை கொடுத்து குடிநீர் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே பேரூராட்சி நிர்வாகம் சீராக குடிநீர் வழங்க வேண்டும் என்றும், 6 வது வார்டில் பேவர் பிளாக் சாலை பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் முதியவர்கள் என அனைவரும் பாதிக்கப்படுவதால் அந்தப் பணியினை துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகத்தினை அதிமுக நகர செயலாளர் ராஜ்குமார் தலைமையில் முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர்.
கோவையில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு