கோவில்பட்டி அருகே கீழபாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சாமிதாஸ், தனது தந்தை பெயரில் 1948ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட நத்தம் வீட்டுமனைக்கு பட்டா கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டினார். இதனை கண்டித்து சாமிதாஸ் மற்றும் அவரது மகன் ஆரோக்கியராஜ், கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில் பாய் விரித்து படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.