தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர், சிறைகாவலர், தீயணைப்பாளர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 6 தேர்வு மையங்களில் 7,556 தேர்வர்கள் பங்கேற்கின்றனர். தேர்வர்களுக்கு கடுமையான சோதனைகளுக்குப் பிறகு அனுமதி வழங்கப்படுகிறது. ஹால் டிக்கெட் உடன் ஆதார், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற அசல் அடையாள அட்டைகள் கட்டாயம். தேர்வு கூடங்களில் செல்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச் போன்ற மின்னணு சாதனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வுக்கு, காலை 9:30 மணிக்குள் வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.