தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பணிக்கு வந்த பெண் தொழிலாளர்களை ஒப்பந்ததாரர் ஒருவர் அவமதித்து வேலைக்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெண் தொழிலாளர்களுக்கு மட்டும் வேலைநாட்களிலும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டதாகவும், இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தச் சம்பவத்தை ஜிடிசிஎல்ஏ தொழிற்சங்கம் கடுமையாக கண்டித்துள்ளது. சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என்றும் தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.