போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற நாசரேத் திருமண்டலத் தேர்தல்

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் ஆற்றங்கரை சேகரத்திற்கான நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு தொடர்பான பதவிகளுக்கான வாக்குப்பதிவு இன்று விளாத்திகுளம் CSI தேவாலயத்தில் நடைபெற்றது. நவம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் ஸ்டீபன் அணியைச் சேர்ந்த ஏனோக் மற்றும் கனகரத்தினராஜ் பெருமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றிருந்தனர். இன்றைய செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான வாக்குப்பதிவு நேரடி தேர்தலுக்கு பதிலாக மறைமுக முறை அறிவிக்கப்பட்டதால், போட்டியிட்ட இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, அப்பகுதியில் சில நிமிடங்கள் பதட்டம் நிலவியது. பின்னர் தேவாலய கதவுகள் பூட்டப்பட்ட நிலையில், காவல்துறை பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஸ்டீபன் அணியைச் சேர்ந்த சொர்ணராஜ் செயலாளராகவும், அற்புதராஜ் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற தரப்பு தேவாலய முன்பு பட்டாசுகள் வெடித்து வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடினர்.

தொடர்புடைய செய்தி