தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தனியார் திருமண மண்டபத்தில், வடக்கு ஒன்றியம் பாரதிய ஜனதா கட்சி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் ஒன்றிய தலைவர் காட்டு ராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கான பாரதிய ஜனதா கட்சியின் பார்வையாளரும், மாநில பொதுச் செயலாளருமான ராம சீனிவாசன் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்தக் கலந்தாய்வு கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சரவணன் கிருஷ்ணன், பொதுச் செயலாளர் சேதுராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, ஒன்றிய பிரதிநிதி கனகவேல்ராஜ், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி