இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சந்திரா பிரியா தனது 3 குழந்தைகளுக்கும் தலைக்கு தேய்க்கும் சாயத்தை குடிக்கச் செய்துள்ளார். பின்னர் தானும் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் 4 பேரும் வீட்டில் மயங்கி கிடந்தனர். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மருத்துவ மாணவி திடீர் தற்கொலை