ஸ்ரீவைகுண்டம்: வாய்க்காலில் ரசாயன கழிவு கலப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தோழப்பண்ணை வாய்க்காலில் அமலைச் செடிகள் ஆக்கிரமிப்பு மற்றும் தனியார் நிறுவனங்களின் ரசாயன கழிவு எண்ணெய் கலப்பால் நீர் மாசடைந்துள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் மீன்கள் இறந்து மிதக்கின்றன. பொதுமக்களுக்கு தோல் நோய்கள், கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரசாயன கழிவு கலப்பை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி