பகுதி செயலாளர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் கீதாஜீவன் பேசுகையில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தவில்லை.
திமுக ஆட்சி அமைந்தபின் தமிழக முதலமைச்சர் முக. ஸ்டாலின் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத்தொகை, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் காலை உணவு, பள்ளி சிறுவர் சிறுமியர்களுக்கு காலை உணவு, திறன்மேம்பாட்டு பயிற்சியின் மூலம் வேலைவாய்ப்பு, நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பலர் ஐஏஎஸ் ஐபிஎஸ் தேர்ச்சி என்று ஒவ்வொரு திட்டத்தையும் அறிமுகப்படுத்தி, அதை நடைமுறைக்கு வந்த பின்பும் மக்களை சென்றடைகிறதா என்று முதலமைச்சர் மாவட்டம் தோறும் ஆய்வுகள் மேற்கொண்டு வருவது மட்டுமின்றி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதற்கென்று ஒரு தனி அதிகாரியும் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.