திருச்செந்தூரில் 2016-ல் சிவகுரு(எ) சிவலட்சம் என்பவரை கொலை செய்த வழக்கில், குற்றவாளி செந்தில்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II நீதிபதி பிரீத்தா தீர்ப்பளித்தார். கூட்டுசதி குற்றத்திற்காக மேலும் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. வழக்கை புலனாய்வு செய்த இன்ஸ்பெக்டர் ஆடிவேல், அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம், தலைமை காவலர் பரணி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.