விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மற்றும் அக்லூட் சிறப்புப் பள்ளியில் வனத்துறை சார்பில் சமையலறைத் தோட்டம் அமைப்பது குறித்து வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றது. வனச்சரக அலுவலர் கனிமொழி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், மாணவர்களுக்கு இயற்கை முறையில் காய்கறி பயிரிடுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் 270 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் 1000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.