தூத்துக்குடி பகுதியில் ஒருவரிடம் போலி வாட்ஸ்அப் எண்கள் மற்றும் மின்னஞ்சல் மூலம் விளம்பரம் அனுப்பி ரூ. 36,98,000 மோசடி செய்த நைஜீரிய நபர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்-IV, குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 37,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு மோசடி குற்றங்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.