தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் பாலஸ்தாபன விழா

தூத்துக்குடி மேலூர் அருள்மிகு தெப்பக்குளம் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற உள்ள மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலஸ்தாபன விழா சிறப்பாக நடைபெற்றது. கடந்த 19ஆம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் ராஜகோபுரம் மற்றும் விமான கோபுரங்களுக்கு பாலாலய கும்பஸ்தாபனம் செய்யப்பட்டது. இன்று விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பூஜைகள், வேத பாராயணம், ஹோமம் மற்றும் பூர்ணாகுதி நடைபெற்றதுடன், பாலஸ்தாபன கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு அம்மனுக்கு அலங்கார தீபாராதனை செய்யப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி