தீ விபத்து: ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு!

கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் கிராமத்தில் உள்ள தனியார் தீப்பெட்டி கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த கார்த்திக் (27) குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 4 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும், காயமடைந்து சிகிச்சை பெறும் சுடலைமுத்து (42), கணேசன் (47) ஆகியோருக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரணத் தொகைகள் உடனடியாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி