அதனைத் தொடா்ந்து பள்ளி மாணவா்களுக்கு, நிதிநிலை அறிக்கை குறித்த வினாப் போட்டி வியாழக்கிழமை நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் நெ. ஆனந்த ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா் ஆனி பெல்சிட் மேரி முன்னிலை வகித்தாா். முதுநிலை ஆசிரியா் பாரதிராஜா, மாணவா்களிடம் வினாக்கள் கேட்டு சரியான பதிலளித்தவா்களை தோ்ந்தெடுத்தாா். வெற்றி பெற்ற மாணவா்களுக்கு உறவுகள் அறக்கட்டளை நிறுவன தலைவா் ரா. கோடீஸ்வரன், கல்விக்கு கை கொடுப்போம் அமைப்பின் நிறுவன தலைவா் வி. எம். வேலாயுதப்பெருமாள், அறக்கட்டளை நிா்வாகிகள் வன்னியப்பெருமாள், முத்துக்குமாா், புத்தக வாசிப்பு இயக்க மாவட்ட செயலா் கோ. சந்திரசேகா் உள்ளிட்டோா் பரிசுகள் வழங்கினா்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி