வெம்பூரில் சிப்காட் திட்டத்தை கைவிட வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

வெம்பூரில் சிப்காட் அமைக்க வேளாண் நிலங்களை கையகப்படுத்துவதை உடனடியாக கைவிட வேண்டும் என்று தமிழக ஏர் உழவன் அனைத்து விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தனியார் திருமண மண்டபத்தில் "தமிழக ஏர் உழவன் அனைத்து விவசாயிகள் சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம்" நிறுவனத் தலைவர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இந்த கலந்தாய்வு கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் மற்றும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கலந்து கொண்ட நிலையில் வெம்பூரில் சிப்காட் திட்டத்தை கைவிட வேண்டும் மேலும் விவசாயிகள் நலன் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி