தருவைகுளம் மீன் இறங்குதளத்தில் உள்ள படகுகளில் ஏற்றுவதற்காக ஒரு கன்டெய்னர் லாரியில் ஐஸ் கட்டிகள் கொண்டு வரப்பட்டன. அந்த லாரி இறங்குதளத்தில் சென்ற போது திடீரென மீன்பிடி இறங்குதளம் உடைந்து பெரிய ஓட்டை விழுந்ததால், லாரியின் பின்பக்க டயர் சிக்கிக் கொண்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக கிரேன் கொண்டு வரப்பட்டு மீன்பிடி இறங்குதளத்தில் சிக்கிய லாரி மீட்கப்பட்டது.
மேலும் இறங்குதளம் உடைந்து போயுள்ளதால், அந்த பகுதியில் லாரிகள், மீன்வண்டிகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. இதனால் உடைந்த பாலத்தை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.