தூத்துக்குடி: ஸ்கூட்டர் மீது லாரி மோதி விபத்து; முதியவர் பலி

சாயல்குடி மேல கரந்தை முனியாண்டி மகன் முத்து (35) லாரி டிரைவரான இவர் லாரியில் முள்ளக்காடு பகுதியில் இருந்து உப்பு லோடு ஏற்றி கொண்டு செல்லும்போது முள்ளக்காடு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் வந்த பள்ளி பேருந்துக்கு வழி விடுவதற்க்காக லாரியை பின் நகர்த்தும்போது லாரியின் பின்னால் வந்த ஸ்கூட்டர் மீது லாரி மோதியது.

இதில் ஸ்கூட்டரில் வந்த முள்ளக்காடு வேத கோவில் தெரு ஞான திரவியம் மகன் ஞானமணி (70) என்பவர் இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி