தூத்துக்குடி: காதணி விழா தகராறு.. ஒருவர் வெட்டி கொலை

தூத்துக்குடி கோரம்பள்ளியைச் சேர்ந்த பெரியநாயகம் (33) என்பவர், எட்டயபுரம் அருகே கீழ ஈராலில் டீக்கடையில் இருந்தபோது, முனியசாமி உள்ளிட்ட இருவரால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை காதணி விழாவில் ஏற்பட்ட தகராறில் நடந்ததா அல்லது முன்விரோதத்தால் நடந்ததா என எட்டயபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி