தூத்துக்குடி: தந்தையை கொலை செய்த மகளுக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர் விபி சித்தன்நகரில் கடந்த 2019ம் ஆண்டு சொத்து பிரச்சனை காரணமாக தந்தை சுப்பையாவை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த வழக்கில், மகள் மூக்கம்மாளுக்கு தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆயுள்தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை 26 கொலை வழக்குகளில் எதிரிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி