தூத்துக்குடி மாநகர சிபிஎம் செயலாளர் முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகராட்சி வார்டு 3க்குட்பட்ட தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள மக்கள் வீடு கட்டி 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகின்றனர். இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. கிரையப் பத்திரம் பெற்ற வீட்டுவசதி வாரிய வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்கப்படாதது அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது. ஆகையால் உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என்றார்.