இந்நிலையில் இன்று (ஜூன் 11) அப்பள்ளியின் நிர்வாகி பார்த்திபன் மற்றும் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய பாஜக தலைவர் சுயம்பு தலைமையில், அப்பள்ளி மாணவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கே. தங்கமாள்புரம் கிராமத்தில் வைத்து அரசுப் பேருந்தை சிறைபிடித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உடனடியாக விளாத்திகுளம் போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளர், போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி நிர்வாகியை செல்போனில் தொடர்பு கொண்டு "இனி இதுபோன்று பள்ளி மாணவர்களுக்கு பயணக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது.
பஸ் பாஸ் வழங்கும் வரை மாணவர்கள் பள்ளி சீருடையில் பயணம் செய்தால் பயணக்கட்டணம் இன்றியே பயணம் செய்யலாம்" என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து, பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்குச் சென்றனர்.