விளாத்திகுளம் அருகே புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இயற்பியல் ஆசிரியர் தியாகராஜன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். புகாரை அலட்சியப்படுத்தியதாக தலைமை ஆசிரியை அன்னை சீபா ஃபிளவர் லைட் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இருவர் மீதும் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகக் கூறி மாணவிகள் சிலர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.