திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி வந்த போது பரிதாபம் தூத்துக்குடியில் இருந்து ஜிப்சம் ஏற்றிக்கொண்டு அரியலூர் சென்ற லாரியும் பின்னால் தஞ்சாவூர் சென்ற காரும் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நீதிபதி உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூரைச் சேர்ந்த நீதிபதி உட்பட ஆறு பேர் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி வந்த போது இந்த விபத்து நடைபெற்றுள்ளது. விபத்து குறித்து மாசார்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.