தூத்துக்குடி: நடுக்கடலில் மூழ்கிய விசைப்படகு; உயிர்தப்பிய 9 மீனவர்கள்

தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த சுபாஷ் என்பவருக்குச் சொந்தமான, சுமார் ரூ. 30 லட்சம் மதிப்பிலான விசைப்படகு ஒன்று நேற்று (பிப்ரவரி 20) காலை கடலுக்குச் சென்றபோது தண்ணீர் புகுந்து நடுக்கடலில் மூழ்கியது. அதிர்ஷ்டவசமாக, படகில் இருந்த 9 மீனவர்கள் அருகில் இருந்த மற்ற விசைப்படகுகளின் உதவியுடன் உயிர்தப்பினர். கரைக்குக் கொண்டுவர முயன்றும் படகு முழுவதுமாக மூழ்கியதால் மீட்க முடியவில்லை. மேலும், இந்த விபத்தால் படகைச் சார்ந்த 25 மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி